Saturday, September 27, 2025

சிங்கப்பெண்ணாக மாறிய ஜாய் கிரிஸில்டா… மாட்டிக்கினாரு மாதம்பட்டி… என்ன நடந்தது?

கடந்த இரண்டு மாதங்களாக எங்க பார்த்தாலும் சினிமா ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா, மாதம்பட்டி ரங்கராஜ் விசையம் தான்.

இதற்கு முன்னதாக ஜாய் கிரிசில்டா சில நாட்களுக்கு முன்பு காவல் நிலையத்தில் அவர் மீது புகாரும் அளித்திருந்தார். இதுவரை அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்த நிலையில் தற்போது மாதம்பட்டி ரங்கராஜ் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று காவல்துறை சம்மன் அனுப்பி உள்ளது.

இந்த நிலையில் மூத்த பத்திரிகையாளர், நடிகர் பயில்வான் ரங்கநாதன் இந்த சம்பவத்தை பற்றி தனியார் youtube சேனலுக்கு பேட்டியளித்துள்ளார்.

அதில்,”அந்த பெண் கர்ப்பம் ஆவதற்கு மாதம்பட்டி ரங்கராஜ் மட்டும்தான் காரணமா? ஜாய் காரணம் இல்லையா? இரண்டு பேரும் சேர்ந்து தான் தப்பு செய்திருக்கிறார்கள். அதன் பிறகு ஏன் கழட்டி விட்டு போனார் என்றால் திருமணமான நபரை ஒருத்தி ஏமாற்றினால் அது சட்டப்படி தவறு.

இவர் ஏற்கனவே சுருதி என்கிற பெண் வழக்கறிஞரை திருமணம் செய்து இரண்டு குழந்தைகளுக்கு தகப்பனாக இருக்கிறார். ஜாய்யிடம் பழகுவதற்காக மாதம்பட்டி பல பொய்களை அவரிடம் சொல்லி இருக்கிறார். ஜாய் ஏன் கண்மூடித்தனமாக நம்பினார்? என்று தெரியவில்லை. இன்று அவர் ஒப்பாரி வைக்கிறார். இன்னொருத்தி புருஷனுக்கு ஆசைப்பட்ட ஜாய் எப்பேர்பட்ட பொய்யையும் சொல்லுவார் என்று பேசியுள்ளார், மேலும், ஜாய் யார் என்றே தெரியாது. அவர் வயிற்றில் வளரும் குழந்தை என் குழந்தையே கிடையாது’ என்று மாதம்பட்டி சொல்லி இருக்கிறார். அந்தப் பெண் இவர்தான் என்னை ஏமாற்றி விட்டார் என்று சொல்கிறார். ஆனால் சட்டம் இதை ஏற்றுக்கொள்ளாது. நான் கேட்கிறேன், ‘ஜாய் உனக்கு மானம், வெட்கம், சூடு, சொரணை இருந்தா அடுத்தவ புருஷனுக்கு ஆசைப்படலாமா?” என்று கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

தொடர்ந்து பேசிய பயில்வான் ரங்கநாதன், “மாதம்பட்டி மனைவி இவளைப் பற்றி பேசுவதே தரக்குறைவாக நினைத்து இன்று வரை வெளியில் எதுவும் பேசாமல் இருக்கிறார். அடிப்படையில் அந்த பெண்ணுக்கு சட்டம் தெரியும் என்பதால் நேரடியாக court-க்கு போயிடுச்சு. தங்களுடைய நிறுவனத்திற்கு 12 கோடி ரூபாய் வரை நஷ்டம் அடைந்துள்ளதாக ஜாய் மீது மான நஷ்ட வழக்கு தொடரப்பட்டுள்ளது. இன்று ஒரு வழியாக ஜாய் போட்ட கூப்பாடு காவல்துறைக்கு எப்படியோ கேட்டுவிட்டது. வருகிற 26 ஆம் தேதி மாதம்பட்டியை சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணைக்கு வர வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அன்று தான் தெரியும் மாதம்பட்டி என்ன சொல்லப் போகிறார் என்று அதுவரை காத்திருப்போம்”. என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் ஜாய் கிரிஸில்டா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியல் தினம் ஒரு போஸ்ட் போடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அந்த வகையில் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பில் உருவான சிங்க பெண்ணே பாடல் வரிகளை தனது ஸ்டோரியாக வைத்திருக்கும் அவர், கடவுள் உயர்வானவர் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். அவரது இந்த ஸ்டோரி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதற்கிடையே தற்போது ஜாய் கிரிஸில்டா அவரது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியல் தினம் ஒரு போஸ்ட் போடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அந்த வகையில் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பில் உருவான சிங்க பெண்ணே பாடல் வரிகளை அவரது ஸ்டோரியாக வைத்திருக்கும் அவர், கடவுள் உயர்வானவர் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். அவரது இந்த ஸ்டோரி தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News