Monday, January 19, 2026

“ஜெயிலர் 2” ரிலீஸ் தேதி; அப்டேட் கொடுத்த ரஜினிகாந்த்!!

கடந்த ஆகஸ்ட் 14 தேதி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வெளியான திரைப்படம் ‘கூலி’.
இந்த திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றாலும் வசூல் பெற்றது.

இப்படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் ‘ஜெயிலர்2’ படத்தில் நடித்து வருகிறார்.சில நாட்களுக்கு முன்பு படப்பிடிப்பிற்காக கேரள மாநிலம் பாலக்காட்டிற்கு நடிகர் ரஜினிகாந்த் புறப்பட்டு சென்றார்.

அங்கு சண்டை உள்ளிட்ட பல்வேறு காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.இதனை தொடர்ந்து படப்பிடிப்புகளை முடித்து விட்டு நடிகர் ரஜினிகாந்த் இன்று சென்னை திரும்பினார்.

அப்போது செய்தியாளர் சந்தில் அவர் கூறியது, தாதா சாகேப் பால்கே விருது பெற்ற மோகன் லாலுக்கு வாழ்த்துகள். மேலும்,அடுத்த ஆண்டு ஜூன் மாதம் 12-ந்தேதி ‘ஜெயிலர்2’ வெளியாகும் என தெரிவித்தார்.

Related News

Latest News