Wednesday, December 24, 2025

நடத்தையில் சந்தேகம்..கொதிக்கும் எண்ணெய்யில் கையை வைக்க வற்புறுத்தல்!! என்ன நடந்தது??

நடத்தையில் சந்தேகம்.. இதை நீ செய்தல் நல்லவள்.. கத்தினால் கொன்றுவிடுவோம்… என்ன நடந்தது? விவரிக்கிறது இந்த தொகுப்பு!!

மெஹ்சானா மாவட்டத்தில் விஜப்பூர் பகுதியில் உள்ள கணவன் மற்றும் 2 குழந்தைகளுடன் 28 வயதான பெண் வசித்து வந்தார். இவர் விவசாயத் தொழிலாளி என்று சொல்லப்படுகிறது.இந்த நிலையில், அந்த பெண் போலீசாரிடம் அளித்த புகாரில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது.

அதாவது அந்த புகாரில், தனது மைத்துனி எனது நடத்தையில் சந்தேகித்து, அவ்வப்போதும் தன்னை இழிவாகப் பேசி துன்புறுத்தியதாக தெரிவித்துள்ளார்.மேலும், கடந்த 16 ஆம் தேதி, “மைத்துனியும் அவரது சகோதரர்களும் இணைந்து, தனது கற்பை பரிசோதிக்க தனது கொதிக்கும் எண்ணெய்யில் கையை வைக்க கட்டப்படுத்தினர்.

இதனை நான் மறுத்ததால் என்னை அடித்து, எனது கை கொதிக்கும் எண்ணெயில் படும்படி அடுப்பை நோக்கித் தள்ளினார்கள். தனது அலறல் கேட்டும் சித்திரவதையை நிறுத்தாமல், மைத்துனி சூடான பாத்திரத்தை எடுத்து எனது வலது காலில் கொதிக்கும் எண்ணெயை ஊற்றினாள்,நான் கத்தினால், என்னைக் கொன்றுவிடுவதாக அவள் மிரட்டினாள்” என்று தெரிவித்துள்ளார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் வீட்டிற்கு விரைந்து சென்று, அவரை ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.அங்கு அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது.இந்த நிலையில் அந்த பாதிக்கப்பட்ட பெண் புகாரளித்த நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related News

Latest News