பிரதமர் மோடியின் 75-வது பிறந்த நாளை முன்னிட்டு, திருவான்மியூர் கடற்கரையில் பா.ஜ.க. சார்பில் தூய்மை பாரதம் என்ற பெயரில் கடற்கரையை தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதனை பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தொடங்கி வைத்து பங்கேற்றார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- அமித்ஷா மற்றும் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு என்பது கூட்டணி கட்சித் தலைவர்கள் ஒருத்தரை ஒருத்தர் சந்தித்து பேசுவது நல்ல விஷயம் தான். டி.டி.வி. தினகரன் எதற்காக பா.ஜ.க.வையும், என்னையும் விமர்சனம் செய்கிறார் என்று எனக்கு தெரியவில்லை என கூறினார்.
இதைத்தொடர்ந்து பட்டினப்பாக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நயினார் நாகேந்திரன் கலந்துகொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறும்போது,பா.ஜ.க. என்றைக்கும் அடுத்த கட்சி பிரச்சனையில் தலையிடாது. பஞ்சாயத்தும் செய்யாது. தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் இருக்கிறது. கடைசி நிமிடங்களில் கூட மாற்றம் வரலாம் என கூறியுள்ளார்.
