Wednesday, December 24, 2025

தி.மு.க.வின் முப்பெரும் விழா!! கரூரில் குவிந்த தொண்டர்கள்!!

தி.மு.க. சார்பில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 17-ம் தேதி அண்ணா பிறந்தநாள், பெரியார் பிறந்த நாள், தி.மு.க. தொடங்கப்பட்ட நாள் ஆகியவற்றை இணைத்து முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த விழா தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு கொங்கு மண்டலத்தைச் சார்ந்த கரூர் மாவட்டத்தில் நடைபெறும் என்று தி.மு.க. தலைமை அறிவித்தது.அதன்படி கரூர், திருச்சி சாலையில் கோடங்கிபட்டி அருகில் இன்று மாலை 5 மணிக்கு முப்பெரும் விழா தொடக்கி நடக்கிறது.

இந்த விழாவிற்கு.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் கலந்துகொள்கிறார். இந்த விழாவின் தொடக்கமாக விழா நடைபெறும் இடத்திற்கு செல்லும் போழுதே ரோட் ஷோவ் சென்றார் முதலமைச்சர், தற்போது அண்ணா, கலைஞர் போன்ற தலைவர்களுக்கு மலர் தூவி மரியாதையை செய்தார்.தற்போது ஏராளமான தொண்டர்கள் குவிந்துள்ளனர்.

மேலும் நிகழ்ச்சியில் கட்சிப் பணிகளில் சிறப்பாக செயல்பட்ட மூத்த முன்னோடிகள் 6 பேருக்கு பெரியார், அண்ணா, கலைஞர், பாவேந்தர் பாரதிதாசன், பேராசிரியர், மு.க. ஸ்டாலின் விருதுகள் வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.

இதற்கிடையே , திமுகவின் முப்பெரும் விழா தொடங்க இருப்பதை முன்னிட்டு பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

Related News

Latest News