Wednesday, December 24, 2025

சருமம், தலைமுடி நல்லா இருக்கணுமா? இத ஒண்ண ஃபாலோ பண்ணுங்க!!

“மூத்தோர் சொல்லும் முது நெல்லிக்கனியும் முன்னே கசக்கும், பின்னே இனிக்கும்” அதாவது, மிகவும் முதிர்ந்த நெல்லிக்கனி முதலில் கசப்பாக இருந்தாலும், பிறகு இனிக்கும். அதுபோலவே, வயதில் மூத்தோர் கூறும் அறிவுரைகள் முதலில் கேட்பதற்கு கடினமாக இருந்தாலும், அவற்றைப் பின்பற்றுவது இறுதியில் நல்லது செய்யும் என்று இதனின் பொருளாகும்.

இது நெல்லிக்காயை உதாரணமாக வைத்துள்ள ஒரு பழமொழி. தற்போது, தினமும் நெல்லிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று விரிவாக பார்ப்போம்.

வைட்டமின் சி நிறைந்த நெல்லிக்காய் தினமும் சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வழிவகுக்கிறது, மேலும், நார்ச்சத்து நிறைந்த நெல்லிக்காய் செரிமானத்தை மேம்படுத்த உதவும்.

குறிப்பாக, நெல்லிக்காய் ஜூஸ் நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றது என்கின்றனர். அதாவது, இது இரத்த சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த நெல்லிக்காய் தினமும் சாப்பிடுவதால் கல்லீரல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்கின்றனர் மருத்துவ வல்லுநர்கள்.

வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த நெல்லிக்காய் சாப்பிடுவதால் சரும ஆரோக்கியத்திற்கு நல்லது.மேலும், தலைமுடியின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உதவுகிறது.

குறிப்பாக உங்கள் உணவு முறையில் ஏதேனும் மாற்றம் செய்ய நினைத்தால் தகுந்த மருத்துவரின் ஆலோசனையோடு மாற்றுவது மிகச்சிறந்தது.

Related News

Latest News