காலை எழுந்தவுடன் உடனடியாக ஏதாவது சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் பலருக்கும் உண்டு. ஆனால், எல்லா உணவுகளும் வெறும் வயிற்றில் சாப்பிட சரியானவை அல்ல. சில உணவுகளை வெறும் வயிற்றில் சாப்பிட்டால், அமிலம் அதிகரித்து வயிற்று எரிச்சல், குமட்டல், வாயுத்தொல்லை மற்றும் உடல் சோர்வு போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.
வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாத 5 முக்கிய உணவுகள்
- பிளாக் டீ மற்றும் காப்பி (அதிகமாக)
காலை எழுந்ததும் தேநீர் அல்லது காப்பி குடிக்கும் பழக்கம் உண்டு. ஆனால் வெறும் வயிற்றில் அதிக அளவு பிளாக் டீ அல்லது காப்பி உங்கள் அமிலச்சுரப்பை அதிகரித்து வயிற்று சுவரை எரிச்சலடையச் செய்யும். இதனால் அமிலம், உப்புசம் மற்றும் வயிற்று எரிச்சல் ஏற்படும். - எண்ணெய் அதிகம் உள்ள பொரியல் உணவுகள்
வெறும் வயிற்றில் பஜ்ஜி, வடை போன்ற எண்ணெய் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது செரிமான பிரச்சனையை ஏற்படுத்தும். மேலும் இது குமட்டல் மற்றும் வாயுத்தொல்லை போன்ற பிரச்சினைகளை உண்டாக்கும். - பழங்கள் (அதிகமாக)
பழங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை தருகின்றன. ஆனால் வெறும் வயிற்றில் அதிக அளவில் பழம் சாப்பிடுவது சரியல்ல. ஏனென்றால் அதில் உள்ள இயற்கை சர்க்கரை மற்றும் நார்ச்சத்து காரணமாக அமிலப்பிரச்சனைகள், உப்புசம் போன்ற பிரச்சனைகளை உருவாகும். - பேக்கரி உணவுகள்
பன்கேக், டோனட், கேக், பன் போன்ற பேக்கரி பொருட்களில் மாவு, சர்க்கரை மற்றும் எண்ணெய் அதிகமாக இருக்கும். இதில் நார்ச்சத்து குறைவாக இருப்பதால், இதை வெறும் வயிற்றில் சாப்பிடும் போது ஜீரணக் கோளாறுகள் ஏற்படலாம். - சூடான பால்
காலை எழுந்ததும் சூடான பால் குடிக்கும் பழக்கம் சிலருக்கு உண்டு. ஆனால், வெறும் வயிற்றில் பாலை எடுத்தால் அது ஜீரணத்தை கடினமாக்கி குமட்டல் அல்லது வாந்தி உணர்வைக் கொடுக்கலாம்.
எனவே, காலை வெறும் வயிற்றில் எதையும் கவனமாக தேர்ந்தெடுத்து சாப்பிடுங்கள். உடலின் ஆரோக்கியத்திற்கும் ஜீரண சக்திக்கும் ஏற்றவாறு உணவு பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.
