ஏடிஎம்மில் பணம் எடுக்க வருபவர்களின் கவனத்தை திசை திருப்பி நூதன முறையில் பணம் கொள்ளையடித்து வந்த கொள்ளையரை போலீசார் கைது செய்தனர்.
கர்நாடகாவை சேர்ந்தவர் திம்மா ராயப்பா. பொறியியல் பட்டதாரியான இவர், ஐடி ஊழியரான நிலையில், ஏடிஎம்மில் பணம் எடுக்க வருபவர்களின் கவனத்தை திசை திருப்பி நூதன முறையில் பணம் கொள்ளையடித்து வந்துள்ளார்.
ஏடிஎம்-ல் பணம் எடுக்க தெரியாதவர்களுக்கு உதவி செய்வதாக கூறி, ஏடிஎம் கார்டுகளை நூதன முறையில் திருடி வங்கி கணக்கில் இருந்து பணத்தை திருடி வந்துள்ளார். சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் கைவரிசை காட்டி வந்த திம்மா ராயப்பாவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணையில், திம்மா ராயப்பா மீது வேலூர், பாலக்கோடு, தேன்கனிக்கோட்டை, சேலம் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் 12க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது.
