இந்தியா – பாகிஸ்தான் உள்பட 7 போர்களை நிறுத்தியிருப்பதாகவும் ஆனால் ரஷியா – உக்ரைன் இடையேயான போரை மட்டும் இதுவரை தீர்க்க முடியவில்லை என்றும் அதிபர் டிரம்ப் கூறியிருக்கிறார்.
ஃபாக்ஸ் நியூஸ் நேர்காணலில் டிரம்ப் பேசுகையில், உக்ரைன் – ரஷியா இடையேயான போரை நிறுத்துவது எளிதானது என்று நினைத்தேன். ஆனால் அது அவ்வளவு எளிதாக இல்லை. போரை நிறுத்த இரண்டு வழிகள் இருந்தன. புதின் அதனைச் செய்ய முயன்றபோது ஸெலன்ஸ்கி அதைச் செய்யவில்லை. அடுத்து ஸெலன்ஸ்கி செய்ய விரும்புகையில் புதின் செய்ய விரும்பவில்லை.
இந்த போரை நிறுத்த தீவிரமாக இறங்க முடிவு செய்திருக்கிறேன். இந்தியா – பாகிஸ்தான் உள்பட நான் இதுவரை 7 போர்களை நிறுத்தியிருக்கிறேன்.ஆனால் உக்ரைன் – ரஷியா போரை மட்டும் இதுவரை நிறுத்த முடியவில்லை என்று பேசியுள்ளார்.
