இந்தியா முழுவதும் சாம்சங் நிறுவனத்தின் போன்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில், பிளிப்கார்ட் தளத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சாம்சங் கேலக்ஸி எம்35 5ஜி (Samsung Galaxy M35 5G) ஸ்மார்ட்ஃபோன் சிறந்த தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.
இந்த ஸ்மார்ட்ஃபோன் அசத்தலான வடிவமைப்பும், தரமான அம்சங்களும் கொண்டது. இப்போது இந்த போனுக்கு வழங்கப்படும் சலுகைகள் மற்றும் இதன் முக்கிய அம்சங்களை பார்க்கலாம்.
தற்போது பிளிப்கார்ட் தளத்தில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி எம்35 5ஜி ஸ்மார்ட்ஃபோனுக்கு 44% தள்ளுபடி வழங்கப்பட்டு, ரூ.13,625 விலையில் விற்கப்படுகிறது.
மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி வாங்கினால் 5% கேஷ்பேக் சலுகையும் உண்டு. ஆகவே, இந்த போனை குறைந்த விலையில் பெற முடியும்.