தென் அமெரிக்க நாடான பிரேசிலில், கடந்த 2022ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் அப்போதைய அதிபர் ஜெய்ர் போல்சனாரோ தோல்வியடைந்தார். ஆனால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய அதிபரின் ஆட்சியை கவிழ்க்க சதி செய்தார்.
இது தொடர்பான குற்றச்சாட்டுகள் அந்நாட்டு உச்சநீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ஜெய்ர் போல்சனாரோ குற்றவாளி என தீர்ப்பு வெளியாகியுள்ளது. அதன்படி பிரேசில் முன்னாள் அதிபர் போல்சனாரோவுக்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் 27 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது.