டிரம்பின் நெருங்கிய நண்பன் சார்லி கிர்க்கை கொன்ற கொலையாளி குறித்து தகவல் தெரிவித்தால் ஒரு லட்சம் டாலர் சன்மானம் வழங்கப்படும் என அறிவிக்கபட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் தீவிர ஆதரவாளரான சார்லி கிர்க் நேற்று சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சந்தேக நபரின் இரண்டு படங்களை FBI வெளியிட்டுள்ளது. துப்பாக்கிச் சூடு நடந்த உடனேயே, குற்றம் சாட்டப்பட்டவர் கூரையிலிருந்து குதித்து தப்பிச் சென்றதாக FBI தெரிவித்துள்ளது.
புகைப்படத்தில் இருப்பவரை குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு ஒரு லட்சம் டாலர், அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 88 லட்சம் ரூபாய் சன்மானமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.