இந்தக் குழுவில் கிளைர் போலாசாக், ஜேக்லின் வில்லியம்ஸ், சுயே ரெட்பெர்ன் போன்ற சிறந்த பெண்கள் நடுவர்களாக இடம் பெற்றுள்ளனர். அவர்கள் இரு முன்னணி உலகக் கோப்பை தொடர்களிலும் நடுவராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர்கள். லாரன் அகன்பாக் 2022 ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் நடுவராக இருந்தார்.
மகளிர் கிரிக்கெட்டின் இந்த வரலாற்று மைய தருணம், விளையாட்டின் அனைத்து துறைகளிலும் மேலும் பல வெற்றிக் கதைகளுக்கு வழியூட்டும் என்று ஐசிசி தலைவர் ஜெய் ஷா நம்பிக்கை தெரிவித்தார். இந்த தொடர் வரும் 30ஆம் தேதி இருந்து நவம்பர் 2ஆம் தேதி வரை நடைபெறும்.
இதில் பாகிஸ்தான் விளையாடும் போட்டிகள் அனைத்தும் கொழும்பில் நடைபெற உள்ளன. இதற்கு முன்பு பர்மிங்காமில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில், இரண்டு ஐசிசி பெண்கள் டி20 உலகக் கோப்பை தொடரில் பெண்கள் மட்டுமே நடுவராக இருந்தனர் எனபது குறிப்பிடத்தக்கது.