ரிலையன்ஸ் ஜியோ நாடு முழுவதும் VoNR சேவையை அறிமுகம் செய்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் தடையற்ற மற்றும் தரமான வாய்ஸ் அழைப்புகளை அனுபவிக்க முடியும்.
VoNR (Voice over New Radio) என்பது ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் சேவையாகும். இது இந்தியாவில் உள்ள ரிலையன்ஸ் ஜியோவின் 5G Standalone (SA) Core தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பம் 5G நெட்வொர்க்கின் மேம்பட்ட டேட்டா திறனை பயன்படுத்தி, உயர் தரம் வாய்ந்த தெளிவான அழைப்புகளை இயலும் வகையில் வழங்குகிறது.
VoNR சேவையின் முக்கிய அம்சங்கள்:
அழைப்பின் தரம் மற்றும் தெளிவு அதிகரித்து, உரையாடல் இயல்பாகவும் தத்ரூபமாகவும் இருக்கும்.
அழைப்புகள் வேகமாக இணைக்கப்படுவதால், காத்திருப்பு நேரம் குறைந்து விரைவாக சேவை செயல்படும்.