நேபாளத்தில் ஊழல், வேலைவாய்ப்பின்மை உள்பட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து அரசுக்கு எதிராக நேற்று முன் தினம் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக, சமூகவலைதளங்களை நேபாள அரசு முடக்கியதால் அங்கு போராட்டம் வெடித்தது.
நாடாளுமன்றம், பிரதமர், ஜனாதிபதி வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இந்த கலவரத்தில் போராட்டக்காரர்கள் 22 பேர் உயிரிழந்தனர். ஜனாதிபதி ராம் சந்திரா பவுடல், பிரதமர் கே.பி.சர்மா ஒலி உள்பட பலர் பதவியை ராஜினாமா செய்தனர். இதனால், நேபாளத்தில் கே.பி.சர்மா ஒலி தலைமையிலான அரசு கவிழ்ந்து ராணுவம் கட்டுப்பாட்டில் நேபாளம் சென்றுள்ளது.
அரசுக்கு எதிராக நடைபெற்ற போராட்டம், கலவரத்தில் நாடு முழுவதும் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் தப்பி ஓடியதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்களை மீண்டும் கைது செய்ய ராணுவம் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.