தமிழில் வெளியான சசிகுமாரின் பிரம்மன், சந்தீப் கிஷன் நடித்த மாயவன் ஆகியோர் திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்தவர் லாவண்யா திரிபாதி. இவர் தெலுங்கு சினிமாவில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 2023ம் ஆண்டு நவம்பர் மாதம் வருண் தேஜ் – லாவண்யா திரிபாதி ஜோடிக்கு திருமணம் நடைபெற்றது. நடிகர் வருண் தேஜ்,லாவண்யா திரிபாதி ‘அந்தால ராட்சசி’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். பின்னர் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வந்த லாவண்யா, வருண் தேஜுக்கு ஜோடியாக நடித்த போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.
இந்த காதலுக்கு குடும்பத்தினரும் சம்மதம் தெரிவித்ததை அடுத்து இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.இதையடுத்து கடந்த ஆண்டு தன்னுடைய மனைவி லாவண்யா கர்ப்பாமாக இருக்கும் தகவலை வருண் தேஜ் வெளியிட்டு இருந்தார்.
இந்த நிலையில், இன்று அந்த ஜோடிக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது.அவருக்கு ரசிகர்கள், திரைத்துறையினர், பிரபலங்கள் என ஏராளமானோர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.