பிரான்ஸ் நாட்டில் பிரதமர் பிராங்காய்ஸ் பாய்ரு தலைமையிலான அரசு இரண்டு நாட்களுக்கு முன் நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்தது. இதையடுத்து பிரதமர் ராஜினாமா செய்தார். இதையடுத்து புதிய பிரதமராக ராணுவ அமைச்சர் லெகர்னுவை அதிபர் இமானுவேல் மேக்ரோன் நியமித்துள்ளார்.
இவ்வாறு புதிய பிரதமர் நியமனம் செய்வதற்கும், அரசின் செலவுகளை சிக்கனமாக செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் பலர் நேரடியாக போராட்டத்தில் இறங்கினர். மக்கள் கூட்டமாக கூடுவதை தடுத்த போலீசார், முன்னெச்சரிக்கை செய்து கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.
இதுவரை 200 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் பாதுகாப்பு பணியில் 80 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் புருனோ தெரிவித்துள்ளார்.