ஒருமுறை பர்சனல் லோன் வாங்கிய பிறகு அதை முழுமையாக திருப்பிச் செலுத்தும் வரை மற்றொரு லோனை வாங்க முடியாது என தவறான நம்பிக்கை உள்ளது. உண்மையில், தேவையான நிபந்தனைகள் பூர்த்தி செய்தல் பல்வேறு பர்சனல் லோன்கள் அங்கீகரிக்கப்படக்கூடும். உதாரணமாக, மருத்துவ செலவுகள், வீட்டுப் புதுப்பிப்பு, கடன் ஒருங்கிணைப்பு போன்ற தேவைகள் இருப்பின் கூடுதல் லோன் வழங்கப்படலாம்.
பர்சனல் லோன்களைக் கிடைக்கும் வாய்ப்பு அதிகமாக இருக்கும் போது, கடன் திருப்பித் செலுத்திய வரலாறு, கிரெடிட் ஸ்கோர் (750க்கும் மேல்) மற்றும் வருமான நிலை ஆகியவை முக்கியமாக பார்க்கப்படும். ஒன்றுக்கு மேற்பட்ட லோன்கள் இருப்பின் அது கடன் சுயவிவரத்தையும் கிரெடிட் ஸ்கோரையும் பாதிக்கும். ஒவ்வொரு கடன் விண்ணப்பத்திலும் “ஹார்ட் என்குயரி” நடைபெற்று கிரெடிட் ஸ்கோர் குறைகிறது.
இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட பர்சனல் லோன்கள் வாங்குவதால் மாதம் இரண்டு அல்லது அதற்கு மேலான EMI-களை கட்ட வேண்டி வரும். இது உங்கள் மாத வருமானத்தின் 40% மீறும் போது நிதி சுமையை ஏற்படுத்தும். எனவே, மாத EMI உங்கள் வருமானத்தில் 40% ஐ தாண்டக் கூடாது என்று நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.
இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட பர்சனல் லோனுக்கு வட்டி விகிதம் மாறுபடும். முதல் லோன் திருப்பிச் செலுத்தியால் கிரெடிட் ஸ்கோர் மேம்படும், அதனால் வட்டி விகிதம் குறைய கூட வாய்ப்புள்ளது. கடன் ஒருங்கிணைப்பும் நல்ல தீர்வாக இருக்க முடியும்.
மொத்த EMI சுமையையும் உங்களால் ஏற்றுக்கொள்ள முடியும் எனும் பட்சத்தில் அடுத்தடுத்த பர்சனல் லோன்களை நீங்கள் வாங்கலாம். இல்லையெனில் இதனால் தேவையில்லாத பொருளாதார அழுத்தம் உண்டாகும்.
இதை மிதமான EMI-களை கணக்கிட்டு, உங்கள் வருமானத்தில் சுமைக்கும் கட்டுப்பாடாக EMI கால்குலேட்டர் உதவிகரமாக இருக்கும்.