கடந்த 2014 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அனைவருக்கும் வங்கி கணக்கு என்ற இலக்கின் ஒரு பகுதியாக ஜீரோ பேலன்ஸ் கொண்ட பிரதான் மந்திரி ஜன்தன் யோஜனா திட்டத்தை கொண்டு வந்தார். இந்த சேவை நாடு முழுவதும் விரிவடைந்தது.
இந்த திட்டம் தொடங்கப்பட்டு 11 ஆண்டுகள் முடிந்துள்ளன. நாடு முழுவதும் தற்போது 56 கோடி ஜன்தன் கணக்குகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதில் சுமார் 13 கோடி ஜன்தன் கணக்குகள் செயல்படாமல் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே அரசு பொதுத்துறை வங்கிகளில் செயல்படாமல் இருந்த 15 லட்சம் ஜன்தன் கணக்குகளை நீக்கி இருப்பதாக செய்தி வெளியாகியிருக்கிறது.
இந்திய ரிசர்வ் வங்கியின் நடைமுறைப்படி ஒரு குறிப்பிட்ட வங்கி கணக்கில் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக எந்த ஒரு பரிவர்த்தனையும் நடக்கவில்லையென்றால் செயல்படாத வங்கிக் கணக்காக அறிவிப்பார்கள் . அப்படி செயல்படாமல் இருந்த வங்கி கணக்குகள்தான் தற்போது நீக்கப்பட்டுள்ளது.