கடந்த ஏப்ரல் 10 ஆம் தேதி நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளியான ‘குட் பேட் அக்லி’ திரைப்படம்.இந்த திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய நடிகர் அஜித்துடன் த்ரிஷா, அர்ஜுன் தாஸ், பிரசன்னா, பிரபு, யோகிபாபு, சுனில் என பலர் நடித்திருந்தனர். இந்த திரைப்படத்திற்கு, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்தார். இந்த திரைப்படத்தில், ‘இளமை இதோ இதோ, ஒத்த ரூபாயும் தாரேன், என் ஜோடி மஞ்சக் குருவி’ ஆகிய பாடல்கள் இடம் பெற்றிருந்தன.
இந்த நிலையில், தான் இசையமைத்த இந்த பாடல்களை தமது அனுமதியில்லாமல் பயன்படுத்தியதாக இசையமைப்பாளர் இளையராஜா சார்பில் வழக்கறிஞர்கள் கே.தியாகராஜன், ஏ. சரவணன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர்.
அந்த மனுவில், ‘குட் பேட் அக்லி’ படத்தில் அனுமதியில்லாமல் பயன்படுத்திய பாடல்களை படத்தில் இருந்து நீக்க வேண்டும். பாடல்களை பயன்படுத்தியதனால், “அனுமதியில்லாமல் பாடல்களை பயன்படுத்தியது பதிப்புரிமைச் சட்டத்துக்கு விரோதமானது என்பதால், படத்தில் பாடல்களை தொடர்ந்து பயன்படுத்த தடை விதிக்க வேண்டும். இதுவரை பயன்படுத்தியதற்காக உரிய இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்” என்று இளையராஜா தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது
இந்த சூழலில், இந்த வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதி முன்னிலை இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இளையராஜா தரப்பில், “தன்னிடம் அனுமதி வாங்காமல் படத்தில் பாடல்கள் பயன்படுபடுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து பாடல்களை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, இளையராஜாவின் பாடல்களை படங்களில் பயன்படுத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து, Mythri Movie Makers நிறுவனம் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார்.இதற்காக ரூ.5 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனுவிற்கு பதில் அளித்த தயாரிப்பு நிறுவனம், “பாடல்களை பயன்படுத்த சட்டப்பூர்வ உரிமையாளரிடம் இருந்து அனுமதி பெற்றதாகவும், ஆனால் அந்த உரிமையாளர் யார்? என்பதை தெரிவிக்கவில்லை” என்றும் கூறப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதி, இளையராஜாவின் பாடல்களை படங்களில் பயன்படுத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், Mythri Movie Makers நிறுவனம் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளித் வைத்துள்ளது.