ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை தொடர்ந்து இறக்குமதி செய்வதற்காக இந்தியா மீது அமெரிக்காவி 50 சதவீத வரிகளை விதித்துள்ளது. இந்நிலையில், இந்தியா மீதான அமெரிக்காவின் வரி விதிப்பை ஆதரித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேசியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர், “ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகள் மீது அமெரிக்கா வரி விதித்தது சரியான நடவடிக்கை. ரஷ்யாவின் போர் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என நினைக்கும் நாடுகள் அவர்களுடன் வர்த்தகம் செய்வதை நிறுத்த வேண்டும்” என்றார்.