Monday, September 8, 2025

கொழுப்பை குறைத்து நச்சுகளை நீக்கும் சீரக தண்ணீர்

சீரகத்தில் நார்ச்சத்து, இரும்புச்சத்து, பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், செலினியம், இரும்பு போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. இந்த சீரகத்தை நீரில் ஊறவைத்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

சீரகத்தை தண்ணீரில் ஊறவைத்தோ அல்லது கொதிக்க வைத்தோ குடிக்கலாம். ஆன்டிஆக்ஸிடன்ட்கள், அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் அத்தியாவசிய தாதுக்கள் நிறைந்த ஒரு ஆரோக்கிய பானமாக சீரக தண்ணீர் இருக்கிறது.

சீரகத்தில் செரிமான நொதிகளின் உற்பத்தியை தூண்டும் சேர்மங்கள் நிறைந்துள்ளன. இதனால் நீங்கள் சாப்பிட்ட உணவு நன்கு செரிமானம் ஆகிறது. மேலும், வயிறு வீக்கம், அஜீரணம், அமிலத்தன்மை போன்ற பிரச்சனைகளை குறைக்கிறது.

சீரகத் தண்ணீரில் வைட்டமின் ஏ, சி மற்றும் ஈ போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துகளும், ஆன்டிஆக்ஸிடன்ட்களும் நிறைந்துள்ளன. இவை நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவுகின்றன.

சீரக தண்ணீர் கொழுப்பை குறைக்கவும் உதவுகின்றன. காலையில் வெறும் வயிற்றில் சீரக தண்ணீர் குடிப்பதால், பசி கட்டுப்படுத்தப்படும். ஆரோக்கியமான உடல் எடை மேலாண்மைக்கு இது உதவுகிறது.

சீரக தண்ணீருக்கு இயற்கையாகவே உடலில் உள்ள நச்சுகளை நீக்கும் பண்பு உள்ளது. சீரக தண்ணீரை தொடர்ந்து குடிப்பதால், உடலில் சேரும் நச்சுகள் வெளியேற்றப்பட்டு, ஒட்டுமொத்த ஆரோக்கியமும் மேம்படும்.

சீரகம் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. சீரக தண்ணீரை தொடர்ந்து குடிப்பதால், நீரிழிவு நோய் வருவதற்கான அபாயம் குறைவதுடன், இன்சுலின் உணர்திறனையும் மேம்படுத்த முடியும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News