நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வெளியான திரைப்படம் கூலி. இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தது. கூலி திரைப்படம் வரும் 11 ஆம் தேதி அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி யில் வெளியாகிறது.
அடுத்ததாக லோகேஷ் இயக்கத்தில் ரஜினி மற்றும் கமல் இணைந்து நடிக்க இருக்கின்றனர். அப்படத்தை கமலின் RKFL இண்டெர்னேஷ்னல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
சமீபத்தில் நடந்த சைமா விருது விழாவில் நடிகர் கமல்ஹாசன் இதனை உறுதி செய்துள்ளார். அவர் அதில் கூறியதாவது “நாங்கள் இருவரும் இணைந்து எப்பவோ நடித்திருக்க வேண்டும். வியாபாரம் ரீதியாக நாங்கள் சேராமல் இருந்தோம். இப்பொழுது அதற்கான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது” என கூறினார்.