அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பாஜக கூட்டணியில் இருந்து விலகியது குறித்து விளக்கமளித்தார்.
அவர் பேசியதாவது : கூட்டணியில் இருந்து வெளியேறியதற்கு பாஜக காரணம் இல்லை. தொண்டர்களின் முடிவு காரணமாக வெளியேறினோம். பாஜக கூட்டணியில் இருந்து அவசரப்பட்டு வெளியேறவில்லை. நிதானமாக எடுத்த முடிவு.
தேசிய ஜனநயாக கூட்டணியை அண்ணாமலை நல்ல முறையில் கையாண்டார். ஆனால் நயினார் நாகேந்திரனுக்கு கூட்டணியை கையாளத் தெரியவில்லை. பாஜக கூட்டணியில் இருந்து ஓ.பி.எஸ். வெளியேறியதற்கு நயினாரின் செயல்பாடுகளே காரணம்.
அதிமுக ஒன்றிணைய வேண்டும் என செங்கோட்டையன் கூறுவது அவ்வளவு பெரிய விஷயம் அல்ல. செங்கோட்டையை கருத்துக்கு ஏதாவது காரணம் பிண்ணனியில் இருக்கலாம். எடப்பாடி பழனிசாமி மாறுவார் அல்லது திருத்தப்படுவார் என 4 மாதங்கள் காத்திருந்தோம். ஆனால் அவர் மனம் மாறுவதாக தெரியவில்லை என அவர் பேசினார்.