அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று முக்கிய முடிவுகளை அறிவிக்கப்போவதாக தெரிவித்திருந்தார்.
இதையடுத்து இன்று செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என்றும் வெளியேறியவர்களை 10 நாட்களுக்குள் ஒருங்கிணைக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு கெடு விதித்துள்ளார்.
இந்நிலையில் இதுகுறித்து மதுரை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியதாவது : இது அதிமுகவின் உட்கட்சி விவகாரம். அதிமுக ஒருங்கிணைய வேண்டும் என கட்சிக்குள் இருக்கும் செங்கோட்டையன் போன்ற மூத்த தலைவர்கள் கோரிக்கை எழுப்பி உள்ளார். செங்கோட்டையன் இன்று மனம் திறந்து பேசப்போவதாக சொன்னார்; ஆனால் அவர் இன்னும் முழுமையாக மனம் திறக்கவில்லை. இது அவர் அளித்த பேட்டியில் இருந்து தெரியவருகிறது என அவர் கூறியுள்ளார்.