Saturday, September 6, 2025

கூடுதல் பெட்டிகள் இணைப்பு : வந்தே பாரத் ரெயிலில் அதிரடி மாற்றம்

பயணிகளின் தேவைகளை கருத்தில் கொண்டு மதுரையிலிருந்து பெங்களூரு வரையிலான வந்தே பாரத் ரெயிலில் வருகிற 11-ந்தேதி முதல் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுகிறது.

மதுரையில் இருந்து பெங்களூருவிற்கும், பெங்களூருவில் இருந்து மதுரைக்கும் இயக்கப்படும் வந்தே பாரத் ரெயில், வருகிற 11-ந்தேதி முதல் கூடுதலாக 8 பெட்டிகள் இணைக்கப்பட்டு 16 பெட்டிகளுடன் இயக்கப்படும்.

மங்களூரு சென்டிரலில் இருந்து திருவனந்தபுரத்திற்கும், திருவனந்தபுரத்தில் இருந்து மங்களூரு சென்டிரலுக்கும் இயக்கப்படும் வந்தே பாரத் ரெயிலில் வருகிற 9-ந்தேதி முதல் கூடுதலாக 4 பெட்டிகள் இணைக்கப்பட்டு 20 பெட்டிகளுடன் இயக்கப்படும். தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News