டெல்லியில் தமிழக பாஜக உயர்மட்டக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் கூறுகையில், ” தமிழக பாஜக நிர்வாகிகளிடையே கருத்து வேறுபாடு, உட்கட்சி பூசல்கள் அதிகரிப்பது கட்சியின் வளர்ச்சிக்கு நல்லதல்ல என நயினார் நாகேந்திரன், எல் முருகன், பொன், ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோருக்கு அறிவுரை வழங்கினார்.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால், உட்கட்சி பூசல்களை தவிர்ப்பது மிக மிக அவசியம். கருத்து வேறுபாடு, உட்கட்சி பூசல்களை தவிர்ப்பது மிகமிக நல்லது” என்றார். இந்த ஆலோசனை கூட்டத்தில் அண்ணாமலை பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.