சீனாவின் துறைமுக நகரான தியான்ஜினில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் இரண்டு நாள் வருடாந்திர உச்சி மாநாடு நேற்று தொடங்கியது. உச்சி மாநாடு நிறைவடைந்த நிலையில், இந்தியா – ரஷியா இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த பிரதமர் மோடியும் புதினும் ஒரே காரில் பயணித்து கூட்டம் நடைபெறும் அரங்குக்கு சென்றனர்.
அந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ள பிரதமர் மோடி, இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெறும் இடத்துக்கு ஒரே காரில் செல்வதாகவும், புதினுடனான உரையாடல் ஆழமானவை எனவும் தெரிவித்துள்ளார்.