சென்னை, ராயபேட்டையில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் 82 மாவட்டச் செயலாளர்கள் உட்பட முக்கிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். வரவிருக்கும் 2026 சட்டமன்ற தேர்தலில் எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்பது குறித்து இந்த கூட்டத்தில் பேசப்பட்டது.
குறிப்பாக அதிமுக, பாஜக கூட்டணி அமைத்து வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வதால் கூட்டணிக்குள் பிளவு ஏற்படும் வகையில் யாரும் கருத்து சொல்லக் கூடாது. பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தற்போது நம்மை பற்றி எதுவும் பேசவில்லை. அப்படி இருக்கையில் நீங்களும் அவரைப் பற்றி எதுவும் பேசக் கூடாது என கூறியுள்ளார். மேலும் திமுக ஆட்சியில் உள்ள குறைபாடுகளை மக்களிடம் எடுத்துக் கூறி நமக்கு வாக்கு சேகரியுங்கள் என்று உத்ததரவிட்டுள்ளார்.