இஸ்ரேல்-காசா மோதல் தொடங்கியதிலிருந்து துருக்கி-இஸ்ரேல் உறவு தீவிரமாக பாதிக்கப்பட்டு வருகிறது. தற்போது, துருக்கி முழுமையாக இஸ்ரேலுடன் பொருளாதார மற்றும் வணிக உறவுகளை இடைநிறுத்த, மேலும் இஸ்ரேலிய விமானங்களுக்கு துருக்கி வான்வெளியை மூட முடிவு செய்துள்ளது. ஏற்கனவே கடந்த வாரம் இஸ்ரேலின் கப்பல்கள் துருக்கி துறைமுகத்திற்கு வருவதற்கு தடை விதித்தது.
காசா, லெபனான், ஏமன், சிரியா மற்றும் ஈரானை நோக்கிய இஸ்ரேலின் தாக்குதல்கள் சர்வதேசச் சட்டத்துக்கு மாறானவை மற்றும் பயங்கரவாத மனநிலையின் வெளிப்பாடு என துருக்கி வெளியுறவு அமைச்சர் ஹக்கன் ஃபிடன் தெரிவித்துள்ளார்.