Sunday, August 31, 2025
HTML tutorial

ஏ.ஐ. துறையில் களமிறங்கும் முகேஷ் அம்பானி

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, டெல்லியில் நடைபெற்ற வருடாந்திர பொதுக்கூட்டத்தில், அனைவருக்கும் ஏ.ஐ. தொழில்நுட்பத்தை அணுக சுலபமாக வழங்க ‘ரிலையன்ஸ் இன்டலிஜென்ஸ்’ என்று அறிவித்துள்ளார்.

இது குறித்து முகேஷ் அம்பானி பேசியதாவது:- 10 ஆண்டுகளுக்கு முன்பு, ரிலையன்சுக்கு டிஜிட்டல் சேவைகள் ஒரு புதிய வளர்ச்சி எந்திரமாக இருந்தது. தற்போது, எங்களுக்கு முன்பு உள்ள வாய்ப்பாக ஏ.ஐ. எனப்படும் செயற்கை நுண்ணறிவு உள்ளது.

நாட்டில் அனைவருக்கும், அனைத்து இடங்களிலும் டிஜிட்டல் சேவை கிடைப்பதை ஜியோ உறுதி செய்தது. அதுபோல், அனைவருக்கும், அனைத்து இடங்களிலும் ஏ.ஐ. தொழில்நுட்பம் கிடைப்பதற்காக ‘ரிலையன்ஸ் இன்டலிஜென்ஸ்’ என்ற நிறுவனம் உருவாக்கப்படுகிறது.

இந்தியாவின் அடுத்த தலைமுறை ஏ.ஐ. உள்கட்டமைப்பை உருவாக்குதல், உலகளாவிய கூட்டாண்மைகளை உருவாக்குதல், இந்தியாவுக்கு ஏ.ஐ. சேவைகளை கட்டமைத்தல், ஏ.ஐ. திறனை வளர்த்தல் ஆகியவைதான் ரிலையன்ஸ் இன்டலிஜென்ஸின் 4 தெளிவான நோக்கங்கள்.

கல்வி, சுகாதாரம், வேளாண்மை போன்ற தேசிய முக்கியத்துவம்வாய்ந்த துறைகளுக்கு தீர்வுகள் அளிக்கும் என அவர் கூறியுள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News