நடிகர் அஜித் சினிமா நடிப்பு மட்டும் இன்றி மோட்டார் மற்றும் கார் பந்தய போட்டிகளில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.
கார் பிரியரான அஜித் உலகில் சிறந்த பிராண்டுகளின் கார்களை வாங்குவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார். அவரிடம் உலக அளவில் பிரபலமான 10-க்கும் மேற்பட்ட அதிநவீன சொகுசு அம்சங்களை கொண்ட வேகமான மற்றும் விலை உயர்ந்த கார்கள் அஜித்குமாரிடம் இருக்கின்றன.அவரிடம் Ford கார் மட்டும் இல்லாமல் இருந்தது. அந்தக் குறையை போக்கும் வகையில் அஜித் அண்மையில் Ford F-150 Raptor truck மாடல் காரை வாங்கியுள்ளார்.
இந்தக் காரின் அம்சங்கள் என்னவென்றால் 3500 சிசி என்ஜின் மற்றும் 300 பி.எச்.பி. பவரை உற்பத்தி செய்யக் கூடிய வசதியும் உள்ளது. மேலும் 87 லிட்டர் எரிபொருள் தொட்டி 10 கியர்கள் என பல்வேறு வசதிகளுடன் ஆன்ரோடு மற்றும் ஆப் ரோடு காக நவீன வடிவில் இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும், அஜித் வாங்கியுள்ள இந்த காரின் விலை ரூ.1.10 கோடி என தகவல்கள் வெளியாகி உள்ளன. அஜித் Ford F-150 Raptor truck காரை வாங்கியிருப்பது, துபாயிலிருந்து இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டதாகக் தகவல்கள் தெரிவிக்கின்றன. துபாயில் இருந்தபோது அவர் அதை வாங்கியிருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. இதனை வைத்து பார்க்கும் போழுது இந்த Ford F-150 Raptor truck காரை இந்தியாவை இன்னும் யாரும் வாங்கவில்லை என்று தெரிகிறது.