கர்நாடக மாநிலம் பெங்களூர் அருகே சுத்தகுண்டேபல்யா காவல் நிலைய எல்லைக்கு உட்பட பகுதியில் பெண்ணின் சந்தேகத்திற்கிடமான மரணம்…என்ன நடந்தது?.. விவரிக்கிறது இந்த கிரைம் கிரைம் தொகுப்பு!!
கர்நாடக மாநிலம் பெங்களூர் நாகசந்திரா மாநகரம் சேர்ந்தவர் ஷில்பா.இவருக்கு 24 வயது.இந்த நிலையில் கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு பிராவீன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.ஷில்பாவும் பிரவீனும் சாஃப்ட்வேர் இன்ஜினீயர்கள் என்று சொல்லப்படுகிறது,ஷில்பா மற்றும் பிரவீனுக்கு ஒன்றரை வயது குழந்தை உள்ளது.
இந்த நிலையில் கடந்த 26 ஆம் தேதி ஷில்பா இரவு வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து போலீசாரிடம், ஷில்பாவின் குடும்பத்தினர் வரதட்சணை கொடுமைக்கு ஆளாகியதாக குற்றம் சாட்டியுள்ளனர்.இதனையடுத்து, சுத்தகுண்டேபல்யா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணை மேற்கொண்டனர் போலீசார்.
அந்த விசாரணையில் பிராவீனுக்கு வேலை பறிபோனதால் பானிபூரி வியாபாரம் செய்துவந்தாகவும், அந்த தொழிலில் போதிய வருமானம் இல்லாததால், மனைவி ஷில்பாவிடம் 10 லட்ச ரூபாய் கேட்டு கொடுமைப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. கொடுமை தாங்கமுடியாமல் தற்கொலை செய்துக்கொண்டதாகவும் சொல்லப்படுகிறது.
இதையடுத்து, ஷில்பாவின் கணவர் பிரவீனை போலீசார் கைது செய்துள்ளனர். அதன் பின்னர் ஷில்பாவின் உடலை நாகசந்திராவில் உள்ள ஷில்பாவின் குடும்பத்தினரின் வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும், ஷில்பாவின் இறப்பு தற்கொலையா ? வேற ஏதேனுமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையில் நடத்தி வருகின்றனர்.