நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க பொதுச்செயலாளருமான விஷால் மற்றும் சாய் தன்ஷிகாவின் திருமண நிச்சயதார்த்தம் இன்று நடைபெற உள்ளதாக தகவல் வெளிக்கியது.விஷாலுக்கு எப்போது திருமணம் என அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.
சென்னையில் நடைபெற்ற சினிமா நிகழ்ச்சி ஒன்றில், நடிகை சாய் தன்ஷிகாவை, தான் திருமணம் செய்து கொள்ளப் போவதாக நடிகர் விஷால் அறிவித்திருந்தார். மேலும், நடிகர் சங்க கட்டடம் திறக்கப்பட்டதும், தனது பிறந்தநாளில் அங்கு திருமணம் நடைபெறும் என்று தெரிவித்தார்,
ஆனால், நடிகர் சங்க கட்டடம் முழுமை அடையாத நிலையில், திட்டமிடப்பட்ட அவரது பிறந்தநாளான இன்று திருமணம் நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்தது. இந்த நிலையில், விஷாலின் பிறந்தநாளை ஒட்டி, இன்று அவருக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெறுகிறதாக தகவல் வெளியாகியது..
அதாவது, சென்னை அண்ணா நகரில் உள்ள அவரது வீட்டில் நடைபெறும் நிச்சயதார்த்தத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்படுள்ளதாக கூறப்படுகிறது. இதில், தடபுடலான விருந்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகிது.
தற்போது நிச்சயதார்த்தம் நடைபெற்று தம்பதிகளாக விஷாலும், சாய் தன்ஷிகாவும் மழையும் கழுத்துமாக, இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.. மேலும் புகைப்படம் வைரலாகி வருகிறது..