நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க பொதுச்செயலாளருமான விஷால், ‘நடிகர் சங்க கட்டிடம் கட்டினால் தான் தனக்கு திருமணம் நடக்கும்’ என அறிவித்து பரபரப்பு ஏற்படுத்தினார். இதனை தொடர்ந்து, இந்த நடிகை, அந்த நடிகை என பல நடிகைகளுடன் விஷால் காதல் என கிசுகிசுக்கள் வந்தன. இவரை ஒரு தீராத விளையாட்டு பிள்ளை என்றும் பலரும் கிண்டல் செய்து வந்தனர்..
இதற்கிடையே, பல்வேறு விஷயங்கள் காரணமாக முடங்கி இருந்த நடிகர் சங்க கட்டுமானப்பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
செப்டம்பரில் நடிகர் சங்க கட்டிடம் திறப்பு விழா இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சமீபத்தில் தனக்கு திருமணம் நடைபெறப்போவதாக அறிவித்தார். அதாவது, முன்னணி கதாநாயகியான சாய் தன்ஷிகாவை காதலிப்பதாகவும், நாங்கள் நடிகர் சங்க கட்டிடம் திறப்புக்கு பிறகு திருமணம் செய்திக்கொள்வோம் என்றும் கூறினார்.
மேலும், ஆகஸ்டு 29-ந் தேதி எனது பிறந்தநாள் அன்று திருமணத்தையும் முடிவு செய்துள்ளோம். அனைவரும் வந்து எங்களை வாழ்த்த வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் விஷாலின் இந்த அறிவிப்பை தொடர்ந்து அவருக்கு, பலரும் வாழ்த்து தெரிவித்தனர். இதனை தொடர்ந்து, நடிகர் விஷால் இன்று 48-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு திரை பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே, இன்று சென்னையில் பிறந்த நாள் கொண்டாடும் விஷாலிடம் செய்தியாளர் சந்திப்பில், பிறந்த நாள் அன்று திருமணம் என்று விஷால் அறிவித்ததை குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, இன்று ஒரு நல்ல செய்தி மதியம் 12.30 மணிக்கு சொல்லுறேன் என்று தெரிவித்தார்..