தங்கத்தின் விலை சவரனுக்கு 520 ரூபாய் உயர்ந்து, மீண்டும் 76 ஆயிரம் ரூபாயை நெருங்கவுள்ளது.
ஆபரண தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக ஏறுமுகத்தில் உள்ளது. 4 நாட்களில் மட்டும் சவரனுக்கு 920 ரூபாய் உயர்ந்து, நகை பிரியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது. அதன்படி, இன்று கிராமுக்கு 65 ரூபாய் உயர்ந்து, 9 ஆயிரத்து 470 ரூபாய்க்கும், சவரனுக்கு 520 ரூபாய் உயர்ந்து 75 ஆயிரத்து 760 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து, 131 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ஒரு லட்சத்து 31 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.