தவெக தலைவர் விஜய் தனது கட்சியின் இரண்டாவது மாநாட்டை கடந்த ஆகஸ்ட் 21 ஆம் தேதி மதுரையில் நடத்தினர்..
அந்த மாநாட்டில் திமுக, அதிமுக, பாஜக கட்சிகளை விஜய் விமர்சித்து பேசியது பெரும் பேசுபொருளானது.
அதிலும் குறிப்பாக ஸ்டாலின் அங்கிள், ராங் அங்கிள் என்று முதலமைச்சர் ஸ்டாலினை கடுமையாக பேசினார் விஜய்.
அவரின் இந்த பேச்சுக்கு சீமான், அண்ணாமலை உள்ளிட்ட சிலர் அரசியல்வாதிகள் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.
இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய இயக்குநர் K.S ரவிக்குமாரிடம் விஜய்யின் இந்தப் பேச்சுத் தொடர்பாகக் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், “அரசியலில் எனக்கு சம்பந்தம் கிடையாது. எனக்கு அனுபவமும் கிடையாது. விஜய் பேசுவது தப்பா யாருக்கும், எனக்குப் படலை. ஏன்னா, அவரு நிஜமாவே நேரில் பார்க்கும்போது, “குட் மார்னிங் அங்கில், வணக்கம். எப்படி இருக்கீங்க?”ன்னு தான் சொல்லுவாரு.அதை வந்து, இன்னைக்கு பப்ளிக்ல சொல்லிருக்காரு. அப்படி தான் நான் பார்க்கிறேன். அதற்கு வேற மீனிங் எடுத்துக்கிட்டு, வேற மாதிரி ஒரு குரூப் வந்து பேசிக்கிட்டு இருக்காங்க. அவங்களுக்கு எல்லாம் நான் சொல்றேன், அதை விடுங்க. மத்தபடி, நாட்டுக்கு என்ன நல்லதோ, அதை எப்படி பண்ணனுமோ அதை பண்ணா ஓகே.
அது யாரா இருந்தாலும் சரி, ரெட் ஜெயன்ட்க்கு ரெண்டு படம் பண்ணிருக்கேன். அந்த நேரத்தில் எல்லாம் ஸ்டாலின் சார் டெபுட்டி சிஎம்மா இருந்தாரு. அவரு வந்து படம் பார்ப்பாரு, நான் நிறைய தடவை மீட் பண்ணிருக்கேன். அவங்க வீட்டுக்கு நிறைய தடவை போயிருக்கேன். நானே வணக்கம் அங்கிள்னு தான் சொல்லுவேன். ஆண்டி எப்படி இருக்கீங்கன்னு தான் சொல்லுவேங்க. அது வந்து தப்பான வார்த்தையே கிடையாது.விஜய் வந்து, கொஞ்சம் கமர்ஷியல் பண்ணி, அவங்களுடைய ஆடியன்ஸ் இருக்காங்க. அங்க ஃபுல்லா, ஜனங்க பூராம் அவருடைய ஆடியன்ஸ், அவருடைய கூட்டம், அந்த கூட்டத்துக்கு ஜாலி பண்றதுக்காக அப்படி பேசியிருக்கலாம்.
அப்படி பேசுனதாக தான் நான் நினைக்கிறேன். அவரு வந்து, தப்பா ஒருத்தரை குறை சொல்லல. அது குறை சொல்ற வார்த்தையே கிடையாது. இப்ப அவரு அங்கிள்னு கூப்பிடறாரு, அதுல என்ன தப்பு இருக்கு? அதுல ஒன்னும் தப்பு இல்ல கிடையாது. தமிழ்ல மாமான்னு கூப்பிட்டா வேணா அவரு தப்பாயிரும். அப்படியே அவரு கூப்பிடலையே என்று K.S ரவிக்குமார் கூறியுள்ளார்.