ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதாக குற்றஞ்சாட்டி இந்திய பொருள்கள் மீது ஏற்கெனவே விதித்த 25 சதவீத வரியுடன் கூடுதலாக 25 சதவீத வரியை அமெரிக்கா அண்மையில் அறிவித்திருந்தது. இந்த நடைமுறை நேற்று முதல் (ஆகஸ்ட் 27) அமலுக்கு வந்துள்ளது.
இந்நிலையில் ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை நிறுத்தினால் இந்தியா மீதான வரியை 25 சதவீதம் வரை குறைக்கப்படும் என வெள்ளை மாளிகை வர்த்தக ஆலோசகர் தெரிவித்துள்ளார்.
இந்தியப் பொருட்களுக்கு கூடுதல் வரிவிதிப்பு நேற்று அமலுக்கு வந்த நிலையில் வெள்ளை மாளிகை வர்த்தக ஆலோசகர் தகவல் அளித்துள்ளார்.