மதுரை மாநாட்டில் தவெக தலைவர் விஜய், “கச்சத்தீவு தமிழகத்துக்கே சொந்தமானது. மத்திய அரசு அதை மீட்டு இந்தியாவிடம் கொடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார். இந்நிலையில் கச்சத்தீவை ஒருபோதும் நாம் இந்தியாவுக்கு விட்டுக்கொடுக்க மாட்டோம் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது தென்னிந்தியாவில் தேர்தல்காலம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தை கூறி வருகின்றனர். அதனை நாம் பொருட்படுத்த தேவையில்லை. கச்சத்தீவை இந்தியாவுக்கு நாம் ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம் என்றும் அவர் கூறியுள்ளார்.