அரிய வகை காந்தங்களை அமெரிக்காவுக்கு வழங்காவிட்டால், 200 சதவீதம் வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் சீனாவுக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.
அமெரிக்கா – சீனா இடையே சிறப்பான உறவு இருந்தாலும், சீனாவை விட அமெரிக்கா அதிக செல்வாக்கை கொண்டுள்ளது. அரிய வகை காந்தங்களை அமெரிக்காவுக்கு சீனா வழங்க வேண்டும்; அவர்கள் அவ்வாறு வழங்கவில்லை என்றால், நாம் அவர்களிடம் 200 சதவீதம் வரி அல்லது அதற்கு ஈடாக எதையாவது வசூலிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.