இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கான கூடுதல் 25% வரிவிதிப்பு நாளை (ஆகஸ்ட் 27) முதல் அமலுக்கு வருகிறது.
ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதாக குற்றஞ்சாட்டி இந்திய பொருள்கள் மீது ஏற்கெனவே விதித்த 25 சதவீத வரியுடன் கூடுதலாக 25 சதவீத வரியை அமெரிக்கா அண்மையில் அறிவித்திருந்தது.
இந்நிலையில் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு கூடுதலாக 25 சதவிகித வரிகளை விதித்து அமெரிக்கா அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. புதிய வரிவிதிப்பு நாளை (ஆகஸ்ட் 27) முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிவித்துள்ளது.