Monday, August 25, 2025
HTML tutorial

லண்டனில் இந்திய உணவகத்துக்கு தீ வைப்பு

கிழக்கு லண்டனில் இந்திய உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தில் தீ வைக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. இந்த தீ விபத்தில் 3 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் என மொத்தம் 5 பேர் காயம் அடைந்தனர்.

இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதில், 3 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் மக்கள் கவலையும், அதிர்ச்சியும் அடந்துள்ளனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News