லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடித்து 2023ல் வெளிவந்த படம் ‘லியோ’. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடித்திருந்தார். லியோ திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றாலும் வசூலில் சக்கைப்போடு போட்டது.
உலக அளவில் இத்திரைப்படம் சுமார் 620.5 கோடி ரூபாயை வசூல் செய்ததாக சொல்லப்பட்டது. அதிகப்படியான வசூலால், 2023 ஆண்டிலேயே அதிக வசூல் செய்த திரைப்படமாக சம்பவம் செய்தது லியோ படம்.
இந்நிலையில் லியோ திரைப்படத்தில் கிடைத்த வருமானம் குறித்து வரிமான வரி தாக்கலில் குறிப்பிட்டிருக்கும் தயாரிப்பாளர் லலித் குமார், லியோ படம் திரையரங்குகளில் ரூ.160 கோடி மட்டுமே வசூலித்ததாக கூறப்பட்டுள்ளது.
லியோ படத்தின் டிஜிட்டல் உரிமம் ரூ.124 கோடி, ஆடியோ உரிமை ரூ.24 கோடி, தென் இந்திய சேட்லைட் உரிமம் ரூ.72 கோடி, இந்தி உரிமை ரூ.24 கோடி என சேர்த்து மொத்தமாக லியோ திரைப்படத்தின் மூலம் தனக்கு ரூ.404 கோடியே 56 லட்சம் வருமானம் வந்திருப்பதாக வரித்துறையில் தாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
லியோ மொத்த வசூலே 160 கோடிதான் என்றால், முதல் நாளில் 151 கோடி வசூலித்த கூலிதான் வெற்றி படம் என்று ரஜினி மற்றும் விஜய் ரசிகர்களுக்கு இடையே சமூக வலைதளத்தில் மோதல் வெடித்துள்ளது.