தவெக வின் 2-வது மாநாடு மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாரப்பத்தி என்ற பகுதியில் நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய விஜய், நம்முடைய ஒரே அரசியல் எதிரி திமுக. கொள்கை எதிரி பாஜக என கூறினார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், “தாமரை இலையில் தண்ணீரே ஒட்டாது தமிழக மக்கள் மட்டும் எப்படி ஒட்டுவார்கள்” என பேசினார்.
இது குறித்து சென்னையில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- விஜய்யின் மாநாடு அரசியல் கூட்டம் போல் இல்லை; ஒரு நடிகரை பார்க்க வந்த கூட்டம். கொள்கை எதிரி பாஜக என்று கூறும் விஜய் தனது கொள்கையை கூறவில்லை. பாஜகவை விமர்சிக்கும் விஜய் காங்கிரஸ் கட்சியை விமர்சிக்காதது ஏன்? என கேள்வி எழுப்பினார்.