தவெக வின் 2-வது மாநாடு மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாரப்பத்தி என்ற பகுதியில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்துகொண்டுள்ளனர். மேளதாள வாத்தியங்கள் முழங்க தமிழக வெற்றிக்கழகத்தின் 2வது மாநில மாநாடு தொடங்கியது. இந்த மாநாட்டில் கலந்துகொண்ட விஜய் மேடையில் பேசி வருகிறார்.
சிங்கம் வேட்டையாட மட்டுமே வெளியே வரும், சிங்கம் தன்னை விட பெரிய விலங்கை தான் வேட்டையாடும்.. வேட்டையாடவே வெளியே வரும் வேடிக்கை பார்க்க வராது
எம்ஜிஆர் போன்ற குணம் கொண்டவர் விஜயகாந்த் மதுரை என்றாலே விஜயகாந்த் நினைவிற்கு வருவார் என்னுடைய அண்ணன் கேப்டன் விஜயகாந்த்
1967, 1977 வரலாறு 2026ல் திரும்பும், என்னுடைய குரல் ஒட்டு மொத்த தமிழ் மக்களின் குரல் எவ்வளவு எதிர்ப்பு வந்தாலும் என் உரிமைக்குரல் ஓங்கி ஒலிக்கும்
“தாமரை இலையில் தண்ணீரே ஒட்டாது தமிழக மக்கள் மட்டும் எப்படி ஒட்டுவார்கள்”
“நான் ஒன்றும் மார்க்கெட் போனபிறகு ரிட்டையர் ஆன பிறகு அடைக்கலம் தேடி அரசியலுக்கு வரவில்லை” என பேசியுள்ளார்.