தவெக வின் 2-வது மாநாடு மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாரப்பத்தி என்ற பகுதியில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்துகொண்டுள்ளனர். மேளதாள வாத்தியங்கள் முழங்க தமிழக வெற்றிக்கழகத்தின் 2வது மாநில மாநாடு தொடங்கியது. இந்த மாநாட்டில் கலந்துகொண்ட விஜய் மேடையில் பேசி வருகிறார்.
நம்முடைய ஒரே அரசியல் எதிரி திமுக. கொள்கை எதிரி பாஜக. பாஜகவுடன் கூட்டணி வைத்துக்கொண்டு ஊரை ஏமாற்றும் கட்சி தவெக கிடையாது. மாபெரும் பெண்கள் சக்தி மாபெரும் இளைஞர்கள் சக்தி நம்மிடம் தான் உள்ளது. ஒட்டுமொத்த தமிழ்நாடு மக்களின் சக்தி நம்மிடம் உள்ளது.
மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்திருக்கும் பிரதமர் மோடி ஒட்டுமொத்த மக்களும் ஆட்சி செய்யவா? அல்லது இஸ்லாமிய மக்களுக்கு எதிராக செயல்படவா? என கேள்வி எழுப்பியுள்ளார்.