தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநாடு மதுரையில் இன்று நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள், தொண்டர்கள், ரசிகர்கள் என லட்சக்கணக்கில் வருவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரம்மாண்டமாக மேடை அமைக்கப்பட்டு மாநாட்டிற்கு வரும் தொண்டர்களுக்கு மருத்துவ வசதி, தண்ணீர் வசதி, கழிவறை வசதி உள்ளிட்டவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று மாலை நடைபெறும் மாநாட்டில் பங்கேற்பதற்காக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நேற்று மதுரைக்கு வருகை தந்திருந்தார்.
இந்த நிலையில் மதுரை மாநாட்டில் பங்கேற்பதற்காக தேனி மாவட்டத்தில் இருந்து சுமார் ஆயிரம் வாகனங்கள் ஊர்வலமாக புறப்பட்டு சென்றனர்
தேனி வடக்கு மாவட்ட தலைவர் பிரகாஷ் தலைமையில் தேனி புதிய பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 500 வேன்களில் ஆயிரக்கணக்கான தமிழக வெற்றிக் கழகத்தினரும் அதேபோல் தேனி தெற்கு மாவட்ட செயலாளர் பாண்டி தலைமையில் சுமார் 500 வேண்களில் நிர்வாகிகள், தொண்டர்கள் ஆட்டம் பாட்டத்துடன் உற்சாகமாக மாநாட்டிற்கு புறப்பட்டுச் சென்றனர்
மாநாட்டிற்குச் செல்லும் அனைத்து வேன்களிலும் தொண்டர்களுக்கு உணவு, தண்ணீர் உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்திலிருந்து சுமார் ஆயிரம் வாகனங்கள் மாநாட்டிற்கு செல்வதால் தேனி, ஆண்டிப்பட்டி ஆகிய பகுதிகளில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு போலீசார்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.