ஜியோ நிறுவனம், தனது பிரபலமான ரூ.249 ப்ரீபெய்ட் திட்டத்தை திடீரென ரத்து செய்துள்ளது. தினசரி 1 GB டேட்டா வழங்கும் இந்த திட்டம் நீக்கப்பட்டதால், ஜியோ வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தினசரி 1 ஜிபி டேட்டா தேவைப்படும் பயனர்களுக்கு ரூ.249 திட்டம் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது. தற்போது ரூ.299 (1.5 ஜிபி/நாள்) திட்டமே குறைந்தபட்ச மாதாந்திர பிளானாக உள்ளது.
இருப்பினும், ஜியோவில் ரூ.189, ரூ.198 மற்றும் ரூ.239 போன்ற குறைந்த விலையில் திட்டங்கள் இன்னும் கிடைக்கின்றன. இத்திட்டங்கள், ரூ.249 திட்டத்துடன் ஒப்பிடும் போது மிகவும் குறைந்த கால வேலிடிட்டியையே வழங்குகின்றன.
பயனர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்த ரூ.249 திட்டத்தை நீக்கியிருப்பது, ஜியோ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.