கிரீஸில் இருந்து ஜெர்மனிக்கு போயிங் 757 ரக விமானம் நடுவானில் சென்று கொண்டிருந்தது. இந்த விமானத்தில் 273 பயணிகளுடன் 8 ஊழியர்கள் பயணம் செய்துள்ளனர். இந்நிலையில் விமானத்தின் எஞ்சினில் திடீரென தீப்பிடித்தது.
எஞ்சினில் தீப்பிடித்தவுடன் கவனமாக செயல்பட்ட விமானிகள் விமானத்தை அவசரமாக தரையிறங்கி பயணிகளின் உயிரை காப்பாற்றினர். பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டதால் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இதற்காக விமான நிறுவனம் பயணிகளிடம் மன்னிப்பு கேட்டது.
நடுவானில் விமானத்தின் எஞ்சினில் தீப்பிடித்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.