Sunday, August 17, 2025
HTML tutorial

நடுவானில் பறந்து சென்ற விமானம்.., திடீரென கதவை திறந்த விமானி ; என்ன நடந்தது?

லண்டனில் இருந்து நியூ யார்க்குக்கு பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது, விமானத்தை எப்படி ஓட்டுவது என்பதை தனது குடும்பத்திற்கு காட்டுவதற்காக விமானி ஒருவர் விமானியின் அறைக்கதவை திறந்து காட்டியுள்ளார். இதனால் அதில் இருந்த பயணிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகினர்.

பாதுகாப்பு காரணங்களுக்காக விமானியின் அறைக்கதவு எப்போதும் மூடப்பட்டிருக்கும். இந்நிலையில் விதிமுறைகளை மீறியதற்காக விமானி இடைநீக்கம் செய்யப்பட்டார். விமானியின் செயலை விமானியில் இருந்த மற்ற பணியாளர்கள் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்திடம் தெரிவித்தனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News